சமீபத்தில் நெல்சன் திலீப் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் “ஜெயிலர்” படத்தின் டீசர் வெளிவந்தது. ரஜினியின் மிரட்டலான இந்த டீசரின் காட்சியால் விஜய், அஜித் ரசிகர்களுடன் ரஜினி ரசிகர்களும் மோதலில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து ஜெயிலர் படத்தின் அப்டேட் குறித்தும் ரஜினி ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு போன்ற முன்னணி நடிகர்களும் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. 65 சதவீதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் வரும் ஏப்ரல் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியிட போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மீண்டும் உருவாகும் காக்க காக்க 2.., சூர்யாவுக்கு வில்லனாக களமிறங்கும் முன்னணி நடிகர்!!
இந்த சூப்பர் அப்டேட்டால் மகிழ்ச்சியில் துள்ளும் ரஜினி ரசிகர்களுக்கு ரஜினியின் அரசியல் செய்தி பற்றியும் தற்போது தகவல் கசிந்துள்ளது. அதாவது நடிகர் ரஜினிகாந்த் மரியாதை நிமித்தமாக ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடை அவரது வீட்டில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் ஆந்திர, தமிழ்நாடு அரசியல் சூழல் பற்றி விவாதித்திருக்கலாம் என வட்டாரங்கள் தெரிவித்து வருகிறது. மேலும் எதற்காக திடீரென ரஜினி ஆந்திர முதல்வரை சந்தித்தார் என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வருகினர்.