Saturday, April 20, 2024

ரஜினி அரசியல் பிரவேசமா?? நாளை மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை!!

Must Read

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் நாளை நடிகர் ரஜினிகாந்த தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் தனது அரசியல் நிலை குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் தேர்தல்:

தமிழகத்திற்கு வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து பணிகளிலும் அனைத்து கட்சிகளும் இறங்கியுள்ளன. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கட்சிகள் முக்கியமான அறிவிப்புகளையும் கட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளையும் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பிரபல நடிகரான கமல்ஹாசன் போட்டியிடவுள்ளார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து இன்னும் சில மர்மங்கள் நிலவி வருகின்றது. அவரும் கடந்த சில வருடங்களாக அரசியலுக்குள் நுழைவார் என்று எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன. இப்படியாக இருக்க இந்த வருட தேர்தலிலாவது அவர் போட்டியிட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இது குறித்து எந்த ஒரு அறிவிப்பினையும் வெளியிடாத நடிகர் ரஜினிகாந்த நாளை தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.

தமிழகம் & கேரளாவிற்கு “ரெட் அலெர்ட்” – டிசம்பர் 2 ஆம் தேதி அதிகனமழைக்கு வாய்ப்பு!!

இந்த அறிவிப்பானது அனைத்து மாவட்ட செயலர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நடிகர் ரஜினிகாந்த் சார்பில் விடுக்கப்பட்டுள்ளது. ஆலோசனை கூட்டம் நாளை ரஜினிகாந்திற்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ஆலோசனை கூட்டம் 9 மணி அளவில் நடைபெற உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலை குறித்து ஆலோசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்? இன்னும் 3 மணி நேரத்தில்? வானிலை மையம் தகவல்!!!

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்ட பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் அவதியுற்று வருகின்றனர். இந்த சூழலில் தமிழக பகுதிகளின் மேல்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -