“மொய்தீன் பாய்” கெட்டப்பை விட இது நல்லா இருக்கேப்பா.., “லால் சலாம்” புது கெட்டப்பில் செம்ம ஸ்டைலாக இருக்கும் ரஜினி!

0
"மொய்தீன் பாய்" கெட்டப்பை விட இது நல்லா இருக்கேப்பா.., "லால் சலாம்" புது கெட்டப்பில் செம்ம ஸ்டைலாக இருக்கும் ரஜினி!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தற்போது இவர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்தை வைத்து லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். அது போக இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட அவரின் கேரக்டர் குறித்து ஒரு புகைப்படத்தை படக்குழு வெளியிட்டது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அந்த கெட்டப் ஒரு சிலரை கவர்ந்தாலும் பலருக்கும் வேண்டா வெறுப்பாக தான் இருந்தது. அந்த அளவுக்கு அந்த கெட்டப் சுமாராக தான் இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்ற நிலையில் தற்போது புதுவையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதற்காக ரஜினிகாந்த் நேற்று புதுச்சேரி சென்றுள்ளார். அப்போது காரில் இருந்தபடியே கை காட்டிவிட்டு படப்பிடிப்புக்கு சென்றார் ரஜினி.

ஒடிசாவில் 3 ரயில்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதல்., மீட்பு பணியின் அதிகாரபூர்வ அறிவிப்பு!!!

அதன்பின்னர் லால் சலாம் புதுவையில் நடைபெற்ற படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதற்காக ரஜினி மேக்கப் போடும் போது எடுக்கப்பட்ட போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ரஜினி வெள்ளை நிற வேட்டி, சட்டையில் செம்ம ஸ்டைலாக இருக்கிறார். ஆனால் இந்த கெட்டப் படத்தில் இருக்கிறதா என்று தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here