ஜெயிலர் படத்தில் தீடிரென களமிறங்கிய புஷ்பா பட நடிகர்.., படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பு!!

0
ஜெயிலர் படத்தில் தீடிரென களமிறங்கிய புஷ்பா பட நடிகர்.., படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பு!!
ஜெயிலர் படத்தில் தீடிரென களமிறங்கிய புஷ்பா பட நடிகர்.., படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பு!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தில் புதிதாக ஒரு நடிகர் இணைந்திருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயிலர் திரைப்படம் :

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து சூப்பர் ஸ்டாராக ஜொலித்து வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது நெல்சன் திலீப்குமார் படைப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரஜினிகாந்த் ஜெயில்வாடனாக நடித்திருக்கும் சில காட்சிகள் சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனைத் தொடர்ந்து ரஜினியின் கேரக்டர் இன்ட்ரோ வீடியோ அவரின் பிறந்தநாள் அன்று வெளியாகி அதிக அளவில் ரீச் ஆனது. மேலும் நெல்சனின் கடைசி படமான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை சுக்குநூறாக உடைத்த நிலையில், தற்போது ஜெயிலர் திரைப்படத்தை நெல்சன் படு கவனமாக எடுத்து வருகிறார். இந்த நிலையில் ஜெயிலர் படத்தில் புதிதாக ஒரு நடிகர் சேர இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

அதிரடியாக உருவாகும் விஷ்ணு விஷாலின் FIR படத்தின் இரண்டாம் பாகம்.., அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியீடு!!

அதாவது பிரபல தெலுங்கு காமெடி நடிகர் சுனில் ஜெயிலர் படத்தில் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். சமீபத்தில் இவர் நடித்த புஷ்பா திரைப்படம் வெற்றியை கண்ட நிலையில், தற்போது மாவீரன், ஜப்பான் என்று தமிழ்ப் படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜெயிலர் திரைப்படம் விரைவில் வெளியாகலாம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here