லம்போர்கினி கார் ஓட்டும் ரஜினிகாந்த் – வைரலாகும் போட்டோ!!

0

ரஜினிகாந்த் மாஸ்க் அணிந்தபடி கார் ஓட்டிச் செல்லும் புகைப்படம் ஒன்று நேற்று வெளியாகி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த்..!

இயக்குநர் சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதத்திலிருந்து ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று மதியம் தனது போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து ரஜினிகாந்த் முகக்கவசத்துடன் லம்போர்கினி கார் ஓட்டிச் செல்லும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளத்தில் வெளியானது. இந்த கொரோனா காலத்தில் ரஜினிகாந்த் முகக்கவசம் அணிந்த புகைப்படம் வெளியாவது இதுவே முதல் முறை என்பதாலும் ஓட்டுநர் இல்லாமல் அவரே காரை ஓட்டிச் சென்றதாலும் எங்கு சென்றிருப்பார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

முந்தானையை நழுவவிட்டு முன்னழகை காட்டிய ரேஷ்மா – ரசிகர்களை வாயை பிளக்க வைத்த புகைப்படம்..!

இதையடுத்து அவர் கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு ஓய்வெடுக்க சென்றுள்ளார் ரஜினிகாந்த். அவருடன் சவுந்தர்யா அவரது கணவர் விசாகன் மற்றும் மகன் வேத் ஆகியோர் உடன் சென்றிருக்கின்றனர். அங்கு காரிலிருந்து இறங்கி குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here