ரஜினியின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட அந்த திரைப்படம்.., ரீ ரிலீஸ் செய்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் சூப்பர் ஸ்டார்!!

0
ரஜினியின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட அந்த திரைப்படம்.., ரீ ரிலீஸ் செய்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் சூப்பர் ஸ்டார்!!

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஒரு அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பாபா திரைப்படம்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஸ்டைல் ஹீரோவாக தற்போது வரை மாஸ் காட்டி வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் இயக்குனர் நெல்சன் படைப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் படு பிசியாக நடித்து வருகிறார். மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் சாங் அடுத்த மாதம் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க இருக்கிறார்.

இப்போ தானே இவானா பேமஸ் ஆனீங்க.., அதுக்குள்ள மூஞ்சி இப்படி ஆகிடுச்சு.., ஷாக் போட்டோஸ் வைரல்!!

இந்நிலையில் அடுத்த மாதம் ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஒரு அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது அடுத்த மாதம் 12ம் தேதி அன்று ரஜினிகாந்த் நடிப்பில் உருவான “பாபா” திரைப்படம் திரைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ரஜினி போக மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா,விஜயகுமார் போன்ற பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதுமட்டுமின்றி கதை, திரைக்கதை, தயாரிப்பாளர் போன்றவை அனைத்தையும் ரஜினி காந்தே செய்தது குறிப்பிடத்தக்கது. இப்படம் வெளியாகி 22 வருடம் கழித்து மறு ஒளிபரப்பு செய்வதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர். மேலும் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த முறையில் ரசிகர்களுக்கு விருந்து வைக்கிறார் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here