“ஜெயிலர்” ஷூட்டிங் ஸ்பாட்டில் சூப்பர் ஸ்டார் செய்த காரியம்..,வெளியான மாஸ் புகைப்படங்கள்!!

0
"ஜெயிலர்" ஷூட்டிங் ஸ்பாட்டில் சூப்பர் ஸ்டார் செய்த காரியம்..,வெளியான மாஸ் புகைப்படங்கள்!!

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படம் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

ஜெயிலர்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் நடிகராக தற்போது வரை திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். அது போக மோகன் லால், சுனில், சிவகார்த்திகேயன், தமன்னா, யோகி பாபு, வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் சிவகுமார் போன்ற பல நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் 60 சதவீதம் முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் நெல்சன் எடுத்த பீஸ்ட் திரைப்படம் சுமாராக போனதால், ஜெயிலர் படத்துக்காக மாங்கு மாங்கு என்று வேலை பார்த்து வருகிறார். இதனால் படத்தோட எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் இருந்து வருகிறது.

சூர்யா ஜோதிகா குடும்பத்திற்கு இவங்க அவ்வளவு முக்கியமா? யாருன்னு பார்த்தா அசந்து போவீங்க!!

இந்த நிலையில் படத்தை குறித்து ஒரு தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது ஜெயிலர் படத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி மற்றும் மோகன்லால் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து நடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் படு வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here