என் வாழ்வில் ஒரு மாற்றம்., இவ்ளோ நாளா இது எனக்கு தெரியல – நடிகர் ராகவா லாரன்ஸ் திடீர் முடிவு!!

0
என் வாழ்வில் ஒரு மாற்றம்., இவ்ளோ நாளா இது எனக்கு தெரியல - நடிகர் ராகவா லாரன்ஸ் திடீர் முடிவு!!
என் வாழ்வில் ஒரு மாற்றம்., இவ்ளோ நாளா இது எனக்கு தெரியல - நடிகர் ராகவா லாரன்ஸ் திடீர் முடிவு!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ராகவா லாரன்ஸ் தன் வாழ்வில் ஒரு முடிவை எடுத்திருப்பதாகவும், இனி எப்போதும் அதை பின்பற்றுவேன் என வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

ராகவா லாரன்ஸ் அதிரடி:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். ரஜினியின் தீவிர ரசிகரான இவர், தற்போது சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறார். நடிப்பது மட்டுமல்லாமல், பல ஆதரவற்றோர் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்துள்ள இவர், ஊனமுற்றோருக்கான பல இல்லங்களை நடத்தி வருகிறார்.

அண்மையில் இவர், தற்போது தான் நல்ல நிலையில் இருப்பதாகவும், இனிமேல் தான் அறக்கட்டளைக்கு யாரும் பொருளுதவிகள் செய்ய வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் அவர், தன் வாழ்க்கையில் ஒரு மாற்றம் கொண்டு வர இருப்பதாக அறிவித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது தன்னிடம் உதவி கேட்டு வருபவர்கள் தன் காலில் விழ அனுமதிப்பதில்லை. இருந்தாலும் அவர்கள் என் காலில் விழுந்து விடுகிறார்கள். இதை தவிர்ப்பதற்காக, இனி யாருக்கு உதவி செய்தாலும் அவர்கள் காலில் நான் விழுந்து அவர்கள் ஆசீர்வாதத்தை பெறுவேன். இதை இன்று முதல் என் வாழ்வில் நான் பின்பற்ற போகிறேன் என வெளிப்படையாக அறிவித்துள்ளார். நடிகரின் இந்த அறிவிப்பால், அவரது ரசிகர்கள் நெகிழ்ந்து போயினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here