சூடுபிடிக்கும் ஜிகர்தண்டா 2 படத்தின் ஷூட்டிங்.., இணையத்தில் கசிந்த தகவல்!!

0
சூடுபிடிக்கும் ஜிகர்தண்டா 2 படத்தின் ஷூட்டிங்.., இணையத்தில் கசிந்த தகவல்!!
சூடுபிடிக்கும் ஜிகர்தண்டா 2 படத்தின் ஷூட்டிங்.., இணையத்தில் கசிந்த தகவல்!!

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ஜிகர்தண்டா 2 படத்தின் படப்பிடிப்பு குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

ஜிகர்தண்டா 2:

தெனிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் கார்த்திக் சுப்புராஜ். சமீபத்தில் இவர் இயக்கிய ஜகமே தந்திரம் மற்றும் மகான் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர் மத்தியில் கலவையான விமர்சனம் பெற்று படுதோல்வி அடைந்தது. அவரின் சினிமா கேரியரில் திருப்புமுனையாக இருந்த திரைப்படம் என்றால் அது கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா திரைப்படம் தான்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் ஆகியோர் நடித்து பட்டையை கிளப்பி இருப்பார்கள். தற்போது 8 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. மேலும் படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

அடடே.,நம்ம ஆர்யா மாமியார் இவங்க தானா? பேத்தியுடன் அவரே வெளியிட்ட சூப்பர் போட்டோ!!

சமீபத்தில் இப்படத்தின் டீசரை பட குழுவினர் வெளியிட்ட நிலையில், மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது. இந்நிலையில் படத்தை குறித்து முக்கியமான அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா நடித்த ஜிகர்தண்டா 2 படத்தின் ஷூட்டிங் படு வேகமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் படத்தின் முழு சூட்டிங் கூடிய விரைவில் முடிவடையும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here