நடிகர் புனித் ராஜ்குமார் கடைசி ஆசை இதுதான் –  நிறைவேற்ற போராடி வரும் அவரது குடும்பத்தினர்!!

0

அண்மையில் உயிரிழந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடைசி ஆசையை, நிறைவேற்ற அவரது குடும்பத்தினர் மிகவும் போராடி வருகின்றனர்.

 நடிகரின் கடைசி ஆசை :

 கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் நடிகர் புனித் ராஜ்குமார். தனக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி உயிரிழந்தார். கன்னட திரையுலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய அவரது இழப்பு, அவரது ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்தது. இவர் இறப்பதற்கு முன்பு வரை பல மாணவர்களை படிக்க வைத்து வந்தார்.

அந்த மாணவர்களின் கல்வி செலவை ஏற்பதாக நடிகர் விஷால் அண்மையில் தெரிவித்தார். அவரின் கடைசி ஆசை குறித்த முக்கிய தகவல் ஒன்றை அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். அதாவது, அவரது சொந்த ஊரான காஜாநூரில் அவரது தந்தை வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அவர் திட்டமிட்டு இருந்ததாகவும், அதுபோக பல்வேறு கல்விப் பணிகளை மேற்கொள்ள  முடிவு செய்திருந்ததாகவும் அவரது சகோதரர்கள் சிவராஜ்குமார் மற்றும் ராகவேந்திர ராஜ்குமார் ஆகியோர்  தெரிவித்தனர்.  நடிகரின் இந்த கடைசி ஆசையை நிறைவேற்ற, அவரது குடும்பத்தினர் முடிவு செய்திருப்பது ரசிகர்களிடத்தில் மகிழ்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here