தனது திருமணம் முடிந்தவுடன் விஜய் டிவி புகழ் செய்த காரியம் – இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்!

0
தனது திருமணம் முடிந்தவுடன் விஜய் டிவி புகழ் செய்த காரியம் - இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்!

கடந்த சில நாட்களுக்கு முன்பு குக் வித் கோமாளி புகழ் தனது காதலியை திருமணம் செய்து கொண்ட பின்னர் வடிவேல் பாலாஜியின் புகைப்படத்தின் முன் நின்று அவரை வணங்கி ஆசீர்வாதம் பெற்றுள்ளார்.

வடிவேல் பாலாஜி – புகழ்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி ஷோ மூலம் மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகர் புகழ். இந்த ஷோவில் புகழ் அடிக்கும் டைமிங் காமெடி மற்றும் எதார்த்தமான பேச்சும், அதிகமாக ரசிகர்களின் மனதை கட்டி இழுத்தது. அதுமட்டுமின்றி காமெடி நடிகனாக சினிமா துறையில் வலம் வந்த நிலையில் தற்போது ஹீரோவாக களமிறங்கியுள்ளார். மேலும் அவரின் கை வசம் அடுத்தடுத்த படங்கள் வைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு காதலி பென்சியாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர் மக்கள் மத்தியில் தெரிந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தவர் மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிரிப்புடா நிகழ்ச்சி மூலம் வடிவேல் பாலாஜி புகழை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இது குறித்து பல மேடைகளில் நடிகர் புகழ் பேசியுள்ளார். இந்நிலையில் திருமணம் முடிந்ததோடு வடிவேல் பாலாஜி புகைப்படம் முன் நின்று ஆசீர்வாதம் பெற்றுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் மாமா, என் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து உள்ளேன், உங்கள் ஆசீர்வாதம் எப்போதும் எங்களுக்கு வேண்டும் என்றும், எனக்கு நீங்கள் பிள்ளையாக பிறக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here