
இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை குறித்து நடிகர் பிரேம்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட போஸ்ட் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இயக்குனர் பிரதீப்:
தமிழ் சினிமாவில் கோமாளி திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆனவர் தான் இயக்குனர் பிரதீப். தற்போது இவர் இயக்கத்தில் லவ் டுடே திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் இதுவரை 50 கோடிக்கும் மேல் வசூலை அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் நடிகர் பிரேம்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் பற்றி ட்வீட் செய்துள்ளார். அதாவது பிரதீப் சினிமாவில் நுழையாத காலகட்டத்தில் தனது “வாட்சப் காதல்” என்ற குறும்படத்தை கடந்த 2014ம் ஆண்டு பிரேம்ஜிக்கு அனுப்பி வைத்து, உங்களுக்கு பிடித்திருந்தால் சப்போர்ட் பண்ணுங்க சார் என்று குறிப்பிட்டிருந்தார்.
குட்டையை குழப்பும் மீனா.,திட்டவட்டமாக சொல்லிய மூர்த்தி – பாண்டியன் ஸ்டோர்ஸ் லேட்டஸ்ட் எபிஸோட்!!
ஆனால் அதற்கு எந்த பதிலும் பிரேம்ஜி அனுப்பவில்லை. தற்போது 8 வருடங்களுக்கு பிறகு பிரேம்ஜி அந்த ட்வீட் க்கு பதில் அளித்துள்ளார். அதாவது உங்களுடைய அடுத்த படத்தில் எனக்கொரு வாய்ப்பு கொடுங்கள் என்று இப்பொழுது பதிலளித்துள்ளார். அவருக்கு பிரதீப் வாய்ப்பு கொடுப்பாரா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
Sir please give me chance in your next film sir ?? https://t.co/6qHt7tfxwN
— PREMGI (@Premgiamaren) November 16, 2022