40 வயதில் கல்யாணத்திற்கு க்ரீன் சிக்னல் காட்டிய பிரேம்ஜி – பொண்ணு யாரு தெரியுமா??

0

பிரபல நடிகரும், பின்னணி பாடகருமான பிரேம்ஜி அமரன் இத்தனை வருடங்களுக்கு பிறகு தனது கல்யாணத்திற்கு க்ரீன் சிக்னல் காட்டியுள்ளாராம்.

பிரேம்ஜி

கங்கை அமரனின் மகனும் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பியுமான பிரேம்ஜிக்கு இசையமைப்பதில் தான் அதிக ஆர்வம் உள்ளவர். இதனால் பலரிடம் உதவி இசையமைப்பாளராக பணிபுரிந்து வந்தார். அதன் பிறகு வல்லவன் படத்தில் நயன்தாராவிற்கு நண்பராக முதன்முதலில் நடித்திருப்பார்.

அதன் பிறகு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றார். மேலும் சென்னை-28 திரைப்படத்தில் என்ன கொடுமை சார் இது?? என்ற டயலாக் மக்கள் மத்தியில் தற்போது வரை நீங்காத இடத்தை பிடித்துள்ளது. மேலும் எவ்வளவோ பண்ணிட்டோம் இதை பண்ணமாட்டோமா?? என்ற டயலாக் மக்கள் மத்தியில் பாப்புலராக உள்ளது.

இவருக்கு தற்போது 40 வயதை கடந்த நிலையிலும் தற்போது வரை திருமணம் ஆகாமலேயே இருந்தார். வீட்டில் யார் திருமணத்தை பற்றி பேசினாலும் இப்போதைக்கு வேண்டாம் என்று தள்ளிவைத்து விடுவாராம்.

தற்போது அவரது அம்மா உயிரிழந்த நிலையில் தன் அம்மாவின் ஆசையாக திருமணத்திற்கு ஓகே சொல்லியுள்ளாராம். தற்போது அவருக்கு பெண் பார்க்கும் படலம் நடந்துகொண்டுள்ளதாம். கூடிய விரைவில் பெண்ணை அறிமுகப்படுவதாகவும் சொல்லி இருக்கிறார்களாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

                                      வாட்ஸ்ஆப் – Enewz Tamil வாட்ஸ்ஆப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here