என்னடா., இது நடிகர் பிரசாத்துக்கு வந்த சோதனை – பெண்ணை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு! போலீசில் புகார்!!

0
என்னடா., இது நடிகர் பிரசாத்துக்கு வந்த சோதனை - பெண்ணை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு! போலீசில் புகார்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான பிரசாந்த், 10 லட்சம் ரூபாய் வரை பண மோசடி செய்து விட்டதாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பெண் புகார்:

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த வின்னர், பிரியாத வரம் வேண்டும், அப்பு, ஜோடி உள்ளிட்ட அனைத்து படங்களும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. சமீப காலமாக இவருக்கு பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால், தனது தந்தையான தியாகராஜன் இயக்கத்தில் அந்தகன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிலையில், நடிகர் பிரசாந்த் தன்னிடம் 10 லட்சம் ரூபாய் வரை பண மோசடி செய்து விட்டதாக Switzerland விமான நிலையத்தில் பணிபுரிந்து வரும் குமுதினி என்ற பெண் சென்னை மாநகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதே போல், அந்த பெண் தன் மீது வேண்டுமென்றே பலி சுமத்துவதாக நடிகர் பிரசாந்த் தரப்பிலிருந்தும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது, 2 புகார்கள் குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here