வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ‘தளபதி 68’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தவிர இந்த படத்தில் விஜய்க்கு இரட்டை வேடங்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த நிலையில், ‘தளபதி 68’ திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து பிரபல 90ஸ் ஹீரோ பிரசாந்த் முக்கியமான ரோலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. வெங்கட் பிரபு திரைப்படம் என்றாலே ஜாலியான, பார்ட்டி பண்ணக்கூடிய கதை இருக்கும் நிலையில், நடிகர் விஜயை அது போன்ற கதைக்களத்தில் எதிர்பார்க்கலாம் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.