இந்த ஒரு விஷயத்துக்காக என்னுடன் சேர்ந்து நடிக்க மாட்றாங்க.., பிரகாஷ் ராஜ் ஓபன் டாக்!!

0
இந்த ஒரு விஷயத்துக்காக என்னுடன் சேர்ந்து நடிக்க மாட்றாங்க.., பிரகாஷ் ராஜ் ஓபன் டாக்!!
இந்த ஒரு விஷயத்துக்காக என்னுடன் சேர்ந்து நடிக்க மாட்றாங்க.., பிரகாஷ் ராஜ் ஓபன் டாக்!!

சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நடிகர் பிரகாஷ் ராஜ் தன்னுடன் சேர்ந்து பணியாற்றிய நடிகர்கள் குறித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் பிரகாஷ் ராஜ்:

தென்னிந்திய சினிமாவில் வில்லனாக ஒரு கலக்கு கலக்கி வந்தவர் தான் நடிகர் பிரகாஷ் ராஜ். தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் அதிகமாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விருமன், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் தினத்தன்று வெளியாக இருக்கிறது. இந்நிலையில் அண்மையில் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் பேசியதாவது, நான் அரசியல் குறித்து இணையத்தில் பதிவிடும் கருத்துக்களால், என்னுடன் சேர்ந்து நடிக்க நடிகர்கள் பயப்படுகிறார்கள்.

செந்திலை வைத்து சொந்த குடும்பத்தில் சூழ்ச்சி செய்யும் அர்ச்சனா.., மனமுடைந்த சிவகாமி.., ராஜா ராணி 2 லேட்டஸ்ட் அப்டேட்!!

ஆனால் அவர்களை என்னுடன் நடிக்க கூடாது என்று எந்த அரசியல்வாதியும் சொல்ல வில்லை. இருப்பினும் என்னுடன் பணியாற்ற பயப்படுகிறார்கள். இதனால் நான் கவலைப்படவில்லை. மேலும் அரசியல் பிரச்சனைகள் குறித்து ஏராளமான நடிகர்கள் அமைதி காத்து வருகின்றனர் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். தற்போது அவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here