சமீப காலமாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கும் ஆந்திர முன்னாள் முதல்வரான சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையே அடிக்கடி வார்த்தை மோதல் எழுந்து வருகிறது. இந்நிலையில் பழைய ஊழல் வழக்கு தொடர்பாக சந்திரபாபு நாயுடு திடீரென கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
இன்னும் சில நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இப்படி சந்திரபாபு நாயுடுவை கைது செய்த பின்னணியில் ஜெகன்மோகன் ரெட்டியின் திட்டமிட்ட சதி இருக்கிறது என்று தெலுங்கு தேசம் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து சிறைக்கு சென்ற சந்திரபாபு நாயுடுவை நேரில் காண நடிகர் பவன் கல்யாண் நேற்று இரவு சென்றார். ஆனால் அவரை போலீசார் உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளனர். இதனால் கோபமான பவன் கல்யாண் நடுரோட்டில் தர்ணா செய்ய ஆரம்பித்தார். இதனால் நிலைமை இன்னும் கொஞ்சம் மோசமானது. இந்த தொடர் சம்பவங்கள் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.