விஜய், சூர்யா பட நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0

கின்னஸ் பக்ரு என்று சொல்லக்கூடிய நடிகர் பக்ரு கொரோனா தொற்றால் பாத்திக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பக்ரு குணமடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா தொற்று

இந்தியாவில் மீண்டுமாக கொரோனாவின் இரண்டாவது அலை வீசிக்கொண்டிருக்கிறது. இதில் கொரோனா பாதிப்பு இந்தியாவில் மீண்டுமாக உச்சத்தை அடைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் 40000, 50000 என மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களாக திரையுலக பிரபலங்களை கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அதே போல் நேற்று நடிகர் மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அவரும் சிகிச்சையில் இருக்கிறார். இந்நிலையில் மலையாள, தமிழ் பட நடிகரான பக்ரு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

#INDvsENG 2வது ஒருநாள் போட்டி – ராகுல் அசத்தல் சதம்!திணறும் இங்கிலாந்து!!

கின்னஸ் பக்ரு என்று அழைக்கப்படும் நடிகர் பக்ரு தமிழில் டிஸ்யூம், 7ஆம் அறிவு, காவலன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நல குறைவு காணப்பட்டது. இதையடுத்து கொரோனா பரிசோதனை செய்ததில் இவருக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது வீடு திரும்பியுள்ளார் நடிகர் பக்ரு. கொரோனா தொற்றிலிருந்து இவர் சீக்கிரம் குணமடைய வேண்டி ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here