இந்த கொசு தொல்லை தாங்க முடியலடா.., ஓமக்குச்சி நரசிம்மன் நியாபகம் இருக்கா?? குடும்ப புகைப்படம் இதோ!!

0
இந்த கொசு தொல்லை தாங்க முடியலடா.., ஓமக்குச்சி நரசிம்மன் நியாபகம் இருக்கா?? குடும்ப புகைப்படம் இதோ!!
இந்த கொசு தொல்லை தாங்க முடியலடா.., ஓமக்குச்சி நரசிம்மன் நியாபகம் இருக்கா?? குடும்ப புகைப்படம் இதோ!!

மறைந்த ஓமக்குச்சி நரசிம்மன் அவர்களின் பேமிலி புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

ஓமக்குச்சி நரசிம்மன்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் கடந்த 1953 ஆம் ஆண்டு கே.பி. சுந்தராம்பாள் நடிப்பில் வெளியான “ஒளவையார்” படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் காமெடி நடிகனாக வலம் வந்தவர் தான் ஓமக்குச்சி நரசிம்மன். இவர் பல்வேறு நாடகங்களில் நடித்ததன் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர். அதுமட்டுமின்றி கிட்டத்தட்ட 14 மொழிகளில் 1500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதில் ஒரு “Indian Summer” என்ற ஹாலிவுட் படமும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பல்வேறு நாடகங்களில் நடித்த நரசிம்மன், சினிமாவில் காமெடி ஜாம்பவான்களான கவுண்டமணி, செந்தில், வடிவேலு மற்றும் விவேக் ஆகியோருடன் இணைந்து கலக்கி இருக்கிறார். அதில் சூரியன் ,முதலவன், இந்தியன் போன்ற படங்கள் பட்டிதொட்டியெல்லாம் ரீச்சானது. கடைசியாக இயக்குனர் சுந்தர்.சி நடிப்பில் கடந்த 2006ம் ஆண்டு வெளியான தலைநகரம் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு உடல் நலக்குறைவால் நடிக்காமல் இருந்த ஓமக்குச்சி நரசிம்மன் கடந்த 2009ம் ஆண்டு தொண்டையில் ஏற்பட்ட புற்றுநோய்யால் பரிதாபமாக உயிரிழந்தார்.

3 வயசு குட்டி ஜோதிகாவை பார்த்து இருக்கீங்களா?? ஐயோ.., ச்சோ. ஸ்வீட்.., கியூட் போட்டோஸ் வைரல்!!

இந்த நிலையில் ஓமக்குச்சி நரசிம்மனின் பேமிலி புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அதாவது ஓமக்குச்சி நரசிம்மன் தனது மனைவி மூன்று பெண் பிள்ளைகளுடன் எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. மேலும் சரஸ்வதி என்பவரை திருமணம் செய்து கொண்ட ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகனும் 3 மகள்களும் இருக்கின்றனர். அவரது மகன் காமேஷ்வரா சாமியாராக மாறியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here