திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாசர் – அவரின் தற்போதைய உடல்நிலை என்ன?

0
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாசர் - அவரின் தற்போதைய உடல்நிலை என்ன?

தெலுங்கு ஷூட்டிங்கில் நடிகர் நாசருக்கு எதிர்பாராத விதமாக அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அவரது உடல்நிலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தற்போதைய உடல்நிலை:

தமிழ் சினிமாவின் முன்னணி வில்லன் நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் வலம் வருபவர் நாசர். இவர் பாகுபலி படத்தில், பிங்கல தேவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது இவர் தெலுங்கில் ஸ்பார்க் என்கிற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கானா போலீஸ் அகாடமியில் நடைபெறும் இதன் படப்பிடிப்பில் சுகாசினி, மெஹ்ரீன், சியாஜி ஷிண்டே உள்ளிட்ட பலர் பங்கு பெற்றுள்ளனர். அப்போது சூட்டிங் ஸ்பாட்டில் , இவருக்கு எதிர்பாராத விதமாக  காயம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய நாசர் தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, திரை பிரபலங்கள் பலரும் அவரிடம் நலம் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here