
கன்னட நடிகை பவித்ரா லோகேஷை நடிகர் நரேஷ் 4வது முறையாக திருமணம் செய்து கொண்ட வீடியோவை தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பவித்ரா லோகேஷ் – நரேஷ்:
கன்னட சினிமாவில் கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் பவித்ரா லோகேஷ். இவர் தமிழிலும் அயோக்யா, க.பெ.ரணசிங்கம், வீட்ல விசேஷம், கூகுள் குட்டப்பா போன்ற படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இவர் இரண்டு முறை விவாகரத்து செய்துள்ளார். சமீபகாலமாக நடிகர் மகேஷ் பாபுவின் அண்ணனான நரேஷ் என்பவரை காதலித்து வருவதாகவும், ரகசியமாக மீட் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகின.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
நடிகர் நரேஷ்க்கு இரண்டு முறை விவாகரத்து ஆகி தற்போது மூன்றாவது மனைவியுடன் வாழ்ந்து வரும் நிலையில் பவித்ரா லோகேஷை காதலித்து வருகிறார். ஒரு நாள் இருவரும் ஹோட்டலில் தங்கி இருப்பதை பார்த்த நரேஷின் 3வது மனைவி அவர்களை செருப்பால் அடிக்க துரத்தினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து நரேஷ் 3வது மனைவிக்கு விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ள நிலையில் இன்று நரேஷ் – பவித்ரா லோகேஷ் ஜோடிக்கு திருமணம் நடைபெற்று உள்ளது.
காவல் நிலைய விசாரணையில் உயிரிழப்போருக்கான இழப்பீடு ரூ.7 லட்சமாக உயர்வு., அரசு அதிரடி!!
அவர்கள் இருவரும் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர். திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை நடிகர் நரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் மூச்சு வாங்குற வயசுல நான்காவது கல்யாணமா என்று நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.
Seeking your blessings for a life time of peace & joy in this new journey of us🤗
ఒక పవిత్ర బంధం
రెండు మనసులు
మూడు ముళ్ళు
ఏడు అడుగులు 🙏మీ ఆశీస్సులు కోరుకుంటూ ఇట్లు
– మీ #PavitraNaresh ❤️ pic.twitter.com/f26dgXXl6g— H.E Dr Naresh VK actor (@ItsActorNaresh) March 10, 2023