நடிகை நமீதாவுக்கு கோலாகலமாக நடந்த வளைகாப்பு – பங்கேற்ற திரைப்பிரபலங்கள்! வைரல் போட்டோஸ்!

0
நடிகை நமீதாவுக்கு கோலாகலமாக நடந்த வளைகாப்பு - பங்கேற்ற திரைப்பிரபலங்கள்! வைரல் போட்டோஸ்!
கோலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான நடிகை நமீதாவுக்கு, நடந்த சீமந்த நிகழ்வில்  திரைப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தி உள்ளனர்.

 வாழ்த்திய பிரபலங்கள் :

தமிழ் சினிமாவில் முன்னணி கவர்ச்சி நாயகியாக விளங்கி வந்தவர் நடிகை நமீதா. இவர் விஜய், விஜயகாந்த், சரத்குமார், சுந்தர் சி உள்ளிட்ட பல பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இதையடுத்து, கடந்த 2017 ஆம் ஆண்டு வீரேந்திர சௌத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், அண்மையில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்த நமீதாவுக்கு, தற்போது கோலாகலமாக வளைகாப்பு நிகழ்வு நடந்துள்ளது. இந்த நிகழ்வில் பூர்ணிமா பாக்யராஜ், ராதிகா சரத்குமார், பிக் பாஸ் ஆரவ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், பிறக்கப்போகும் தனது குழந்தைக்காக  நமீதா “ஆராரோ ஆரிரரோ” என்ற தாலாட்டு பாடல் பாடினார். இதையடுத்து அங்கு வந்திருந்தவர்கள் உங்களுக்குள்ள இவ்வளவு திறமையா? என குறிப்பிட்டு மனதார பாராட்டினார். இதுகுறித்த, போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here