
நடிகர் நாக சவுர்யா நட்ட நடு ரோட்டில் வாலிபனை தட்டி கேட்ட வீடியோ மூலம் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
நடிகர் நாக சவுர்யா:
தெலுங்கு வட்டாரங்களில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் நாக சவுர்யா. கடந்த 2011ம் ஆண்டு வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் படமான Cricket Girls And Beer எனும் படத்தின் மூலம் நாக சவுர்யா ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் தொடர்ந்து நடித்து தற்போது முன்னணி நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார். கடந்த ஆண்டு பெங்களூருவை சேர்ந்த அனுஷா ஷெட்டி என்பவரை கல்யாணம் செய்து கொண்டார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தை புரட்டி போட்டது. தற்போது இவர் ரீல் வாழ்க்கையில் மட்டும் ஹீரோ இல்ல நிஜத்திலும் நான் ஹீரோ தான் என்று ஒரு செயலை செய்துள்ளார். அதாவது ஹைதராபாத்தில் ஒரு சாலையில் நாக சவுர்யா காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது, ஒரு வாலிபன் ஒரு பெண்ணிடம் ஆபாச வார்த்தைகளை பேசி, அடித்து கொண்டிருந்தான். இதை பார்த்தும் பார்க்காத மாதிரியும் அங்கே இருந்தவர்கள் எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
லேசா லேசா…தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை!
இத்தனைக்கும் இந்த பிஸியான சாலையில் ஒருவரும் அவர்களை தடுக்கவில்லை. ஆனால் நாக சவுர்யா காரை நிறுத்தி, அந்த வாலிபனை தட்டி கேட்டார். மேலும் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேள் என்று கோபத்துடன் வாலிபனிடம் கூற, அந்த வாலிபனோ மன்னிப்பு கேட்டு கூட்டத்தை கலைந்து சென்றனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இவர் நடித்த பலான அப்பாயி, பலான அம்மாயி எனும் திரைப்படம் வருகிற மார்ச் மாதம் 17 ஆம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.