சிறகடிக்க ஆசை சீரியலை விட்டு விலகும் முத்து? அவரே கொடுத்த முக்கிய பதிவு இதோ!!!

0
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதை வென்றவர் தான் வெற்றி வசந்த். இவரின் எதார்த்தமான நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்றே சொல்லலாம். இப்படி இந்த சீரியலில் அசத்தி வரும் வெற்றி வசந்த் இன்ஸ்டாகிராம் லைவில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதன்படி ரசிகர் ஒருவர் உங்களை எப்படி பார்க்க வேண்டும் என்று கேட்டதற்கு, நான் சீரியலில் மட்டுமல்லாமல் இப்போது சில வெப் சீரிஸிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். இது தவிர சில திரைப்படங்களில் நடித்து வருகிறேன். எனவே சீரியலை போல எனக்கும் இந்த படங்களிலும் உங்களது ஆதரவு தேவை என கூறியுள்ளார்.

மேலும் மற்றொரு ரசிகர்கள் நீங்கள் படத்தில் நடிப்பதால் இந்த சீரியலில் நடிப்பீர்களா என கேட்டுள்ளனர். அதற்கு வெற்றி வசந்த் நான் இப்போ பேசுறத நீங்க ரெக்கார்ட் கூட பண்ணி வச்சிக்கோங்க. நான் இந்த சீரியலில் இருந்து எப்போதும் விலக மாட்டேன். இந்த சீரியல் இன்னும் எத்தனை வருடங்கள் ஒளிபரப்பினாலும் அதில் சுபம் என்ற ஒரு வார்த்தை வரும் வரை நான் கதாநாயகனாக நடிப்பேன். இந்த சீரியல் தான் எனக்கு மறுவாழ்க்கையை தந்தது. மேலும் எத்தனை படங்களில் நடிப்பதற்கான மிகப்பெரிய வாய்ப்பு வந்தாலும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிப்பது தான் என்னுடைய முதல் வேலை என பதிலளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here