இவர் நல்ல கணவர் இல்லை… பிரபல நடிகரை விவாகரத்து செய்யும் இரண்டாவது மனைவி!!!

0

மலையாளத்தில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் முகேஷ். தற்போது அவரின் இரண்டாவது மனைவி தேவிகா அவரை விவாகரத்து செய்ய உள்ளதாக அறிவித்து உள்ளார். மேலும், தேவிகா நடிகர் முகேஷ்க்கு விவாகரத்து நோட்டீஸ் ஒன்றையும் அனுப்பி உள்ளார்.  இந்த தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் மொழியில் மனைவி ஒரு மாணிக்கம், ஐந்தாம் படை உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தவர் நடிகர் முகேஷ் அவர்கள். இவர் மலையாளத்தில் இதுவரை 260க்கும் மேற்பட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் திரைப்பட நடிகையான சரிதாவை 1988ஆம்  ஆண்டு திருமணம் செய்து  கொண்டார். இந்நிலையில் அவர்களின் திருமண வாழ்க்கை 2011ஆம் ஆண்டு  முடிவுற்றது. இதற்கு சரிதா முகேஷ் குடிகாரர், பல பெண்களுடன் தொடர்புடையவர் என பல காரணங்கள் கூறி விவாகரத்து பெற்று அவரை பிரிந்தார்.

இதையடுத்து நடிகர் முகேஷ் 2013 ஆம் ஆண்டு பிரபல பரதநாட்டிய கலைஞர் மெத்தில் தேவிகாவை திருமணம் செய்து கொண்டார். தற்போது தேவிகாவும் அவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்து அவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

மேலும் இது பற்றி தேவிகா தெரிவிக்கையில், இவர் நல்ல கணவர் இல்லை, இத்தனை ஆண்டுகள் ஆகியும் இவரை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இனி மேலும் இவரை என்னால் புரிந்து கொள்ள முடியாது. அவர் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை, என கூறியுள்ளார். மேலும் இது போன்ற காரணங்களால் தான் பிரிய முடிவு செய்து உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here