தமிழ் சினிமாவில் மீண்டும் கால் பதிக்கும் நடிகர் மோகன் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

0

தமிழ் சினிமாவில் 80களில் அனைவரையும் தனது பாட்டால் கட்டி  போட்டவர் நடிகர் மோகன். இதனால் இவரை மைக் மோகன் என்றே அழைத்து வந்தனர். தற்போது அவர் மீண்டும் நடிக்க வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மீண்டும் மோகன்:

மோகன் தமிழ் சினிமாவில் 80களில் மிகவும் புகழ்பெற்ற நடிகர். கமல், ரஜினிக்கு ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது போலவே மோகனுக்கும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. மேலும் இவர் படங்களில் வரும் பாட்டுக்களை பார்ப்பதாகவே  ரசிகர்கள் வருவார்கள். மேலும் அவருக்கு வெள்ளி விழா நாயகன் மற்றும் மைக் மோகன், கமல்ஹாசன் ஹீரோவாக நடித்த கோகிலா என்ற திரைப்படத்தில் அறிமுகமானதால் கோகிலா மோகன் என்றும் பெயர்கள் வைத்துள்ளனர் ரசிகர்கள்.

தற்போது நடிகர் மோகன் மீண்டும் தமிழ் சினிமாவில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமலின் அண்ணன் சாருஹாசன் ஹீரோவாக நடிக்கும் தாதா 87 என்ற படத்தை இயக்கும் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி. நடிகர் மோகன் வைத்து சில்வர் ஜூப்லி ஸ்டார் என்ற படம் இயக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் இந்த படத்தின் அறிவிப்புகளை வெகு விரைவில் படக்குழு அறிவிக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here