பழம் பெரும் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி  திடீரென மருத்துவமனையில் அனுமதி., ரசிகர்கள் அதிர்ச்சி!!

0
பழம் பெரும் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி  திடீரென மருத்துவமனையில் அனுமதி., ரசிகர்கள் அதிர்ச்சி!!
இந்திய திரையுலகில் முன்னணி நடிகர்கள் ஒருவராக வலம் வந்தவர் தான் மிதுன் சக்கரவர்த்தி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம்,  மலையாளம், பெங்காலி உட்பட பல மொழிகளில் பிஸியாக நடித்துள்ளார். மேலும் மூன்று முறை தேசிய விருதுகள் பெற்றுள்ள இவர் 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அசத்தியுள்ளார்.
இப்படி திரையுலகில் முக்கிய நட்சத்திரமாக ஜொலித்து வந்த இவர் குறித்து ஒரு அதிர்ச்சி தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இன்று காலை திடீரென இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாம். இதனால் கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம். மேலும் தற்போது இவருக்கு நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here