கணவர் இறந்த கொஞ்ச நாளிலேயே இப்படியொரு துக்கமா? கதி கலங்கி நிற்கும் நடிகை மீனா!!

0
இதெல்லாம் ரொம்ப கொடுமை.. இது நடந்து இருந்தால் என் கணவர் உயிர் பிரிந்திருக்காது - மனம் திறந்த மீனா!

நடிகை மீனாவின் 13ம் ஆண்டு திருமண நாளான இன்று, தன் கணவர் இல்லாமல் கலங்கி நிற்கும் அவருக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்கள் ஆறுதல்:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான, மீனா கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி பிரபல பொறியாளர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. தொடர்ந்து, சினிமாவில் முன்னணி நாயகியாக திகழ்ந்து வந்த நடிகை மீனாவுக்கு, பேரதிர்ச்சி தரும் விதமாக  அவரது கணவர் இறப்பு அமைந்தது.

நுரையீரல் தொற்றால் திடீரென மறைந்த கணவரின், மறைவால் நிலைகுலைந்து போன மீனாவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் ஆறுதல் தெரிவித்தனர். இந்த நிலையில் இவர்களது 13ஆம் ஆண்டு திருமண நாள் விழா, இன்று வந்துள்ள நிலையில் இது குறித்த முக்கிய பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.

இந்த வருஷம் அவர் கூட இருக்க கொடுத்து வைக்கல.., மீனாவின் திருமண நாள் பதிவு! கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!!

அதாவது கணவர் இறந்த, கொஞ்ச நாளில் திருமண நாள் வருவது என்பது  எவ்வளவு சோகமான விஷயம். இது போன்ற நிலை எதிரிக்கு கூட வரக்கூடாது. மீனா நீங்க ஆறுதலா இருங்க, அப்பதான் உங்க மகள் நைனிகா தைரியமா இருப்பாங்க! என ரசிகர்கள் நடிகை மீனாவுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இது குறித்த பதிவுகள் கோலிவுட் வட்டாரத்தில் ரசிகர்களை கண்கலங்க செய்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here