கணவரை இழந்த துக்கத்தில் இருந்து மீண்டு வந்த நடிகை மீனா..,  அவரே மகிழ்ச்சியுடன் வெளியிட்ட பதிவு!!

0
நடந்தது நடந்து போச்சு., இனி புலம்ப ஒண்ணுமில்லை - கணவரை இழந்த துக்கத்திலிருந்து மீண்ட நடிகை மீனா!!
கணவரை இழந்த துக்கத்தில் இருந்து மீண்டு வந்த நடிகை  மீனா..,  அவரே  மகிழ்ச்சியுடன் வெளியிட்ட பதிவு!!

கணவரை இழந்த துக்கத்தில் தவித்து வந்த மீனா வீட்டுக்கு சென்ற பிரபலங்கள், அவருடன் சேர்ந்து முக்கிய செயல் ஒன்றை செய்துள்ளனர். இதனால் நடிகை மீனா வாயடைத்து போனார்.

மீனா மகிழ்ச்சி:

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது வரை முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை மீனா. இவரது கணவர் வித்யாசாகர், மும்பையில் புகழ்பெற்ற தொழிலதிபராக விளங்கி வந்தார். நுரையீரல் தொற்று காரணமாக, மருத்துவமனை தீவிர சிகிச்சையில் இருந்து வந்த இவர் சில மாதங்களுக்கு முன் உயிரிழந்தார். கணவரை இழந்த மீனா, ஒரே மகளுடன் நிற்கதியாய் நின்றார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அவருக்கு டான்ஸ் மாஸ்டர் கலா உள்ளிட்டோர் ஆறுதலாக இருந்து வந்தனர். தற்போது, நடிகை மீனா வீட்டுக்கு சென்ற சினேகா மற்றும் சங்கீதா ஆகிய பிரபலங்கள் நடிகை மீனாவின் 46-வது பிறந்தநாளை அவரது வீட்டில் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். இதையடுத்து, நடிகை மீனா சிரித்துக் கொண்டே கேக் சாப்பிட்ட போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள், நீங்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here