கடைசி வரை நிறைவேறாமல் போன “எதிர்நீச்சல்” மாரிமுத்துவின் ஆசை.., கண் கலங்கிய ரசிகர்கள்!!

0
கடைசி வரை நிறைவேறாமல் போன
கடைசி வரை நிறைவேறாமல் போன "எதிர்நீச்சல்" மாரிமுத்துவின் ஆசை.., கண் கலங்கிய ரசிகர்கள்!!

வெள்ளித்திரையில் இயக்குனர் நடிகர் என்ற புகழுடன் ஜொலித்து வந்தவர் தான் மாரிமுத்து. இதன் பின்னர் இவர் சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து அசத்தி வந்தார். இந்த தொடரில் இவர் பேசிய ”இந்தா மா ஏய்” என்கிற டயலாக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி வெகு சிறப்பாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வந்த நிலையில், இன்று இவரின் மரண செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இவரின் நீண்ட நாள் கனவு நிறைவேறாமலே போன சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அஜித்தை வைத்து படம் இயக்க வேண்டும் என்பதற்காக அவரிடம் இவர் கதை கூறியிருந்தாராம்.

கடைசி நேரத்தில் ரிலீஸ் தேதியை மாற்றிய “சந்திரமுகி 2” படக்குழு.., இது தான் காரணமா? வெளியான முக்கிய தகவல்!!

ஆனால் சில காரணங்களால் அந்த படம் கைகூடவில்லையாம். அதன் பிறகு சில வருடங்களுக்கு முன்பு மீண்டும் அஜித்திடம் கதை கூறியிருப்பதாகவும், கூடிய விரைவில் தனது ஆசை நடக்கும் என்ற மாதிரியும் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். ஆனால் அதற்குள் இவர் மரணித்து விட்டதால், இவர்களின் காம்போவில் உருவாக இருந்த படத்தை பார்க்க முடியாமல் போனதை நினைத்து ரசிகர்கள் கண்கலங்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here