அஜித்,விஜய்க்கு ஏன் சம்பளம் கொடுக்குறீங்க? “எதிர்நீச்சல்” குணசேகரன் ஆவேசம்!!

0
அஜித்,விஜய்க்கு ஏன் சம்பளம் கொடுக்குறீங்க?
அஜித்,விஜய்க்கு ஏன் சம்பளம் கொடுக்குறீங்க? "எதிர்நீச்சல்" குணசேகரன் ஆவேசம்!!

நடிகர் அஜித் மற்றும் விஜய் வாங்கும் 100 கோடி சம்பளம் குறித்து எதிர் நீச்சல் சீரியல் மாரிமுத்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

விஜய் – அஜித்

நடிகர் விஜய் நடித்த வாரிசும், அஜித்குமார் நடித்த துணிவும் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் ரேஸில் ஒரே நாளில் மோதியது. 8 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் மற்றும் அஜித் படங்கள் மோதியதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அதே போல் இரண்டு திரைப்படமும் அவர்களின் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வசூலில் சக்கை போடு போட்டது. வழக்கம் போல் இந்த ரேஸிலும் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் தான் வெற்றி பெற்றது. தற்போது தமிழ் சினிமாவில் இரண்டு தூண்களாக இருந்தும் வரும் விஜய் லியோ திரைப்படத்திலும், அஜித் ஏகே 62 படத்திலும் பிசியாக இருந்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் சமீப காலமாக சில தயாரிப்பாளர்கள் விஜய் மற்றும் அஜித் வாங்கும் 100 கோடி சம்பளம் குறித்து தங்களது ஆதங்களை கொட்டி தீர்த்து வருகின்றனர். இந்த நிலையில் தில் ராஜு விஜய்க்கு 125 கோடி சம்பளமாக கொடுத்துள்ளார். இது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்தனர். அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் மாரிமுத்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் சம்பளம் குறித்து பேசியுள்ளார்.

ஏய்.., என்ன அழகுடா இது.., கண்ணை சிமிட்ட கூட முடியல.., வாணி போஜனால் திண்டாடிய இளசுகள்!!

அவர் பேசியதாவது, விஜய், அஜித் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அவர்கள் கேட்கும் 100 கோடி சம்பளத்தை கொடுத்து தான் ஆக வேண்டும். விஜய்யும் அஜித்தும் அடிச்சா பணத்தை வாங்குகின்றனர். இல்லையே. அவர்கள் வைக்கும் டிமாண்ட் பிடிச்சதால தான் இவ்வளவு சம்பளம் கொடுக்குறீங்க. பிடிக்கலான நீங்க ஏன் கொடுக்கிறீங்க? என்று கூறினார். மேலும் அவர்களுடைய மார்க்கெட்டுக்கு ஏற்ப சம்பளம் கேட்பது தவறுன்னு யாரும் சொல்ல முடியாது என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here