தளபதி 67 அப்டேட்க்கு மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்.., வைரலாகும் டிவிட்டர் பதிவு!!

0
தளபதி 67 அப்டேட்க்கு மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்.., வைரலாகும் டிவிட்டர் பதிவு!!
தளபதி 67 அப்டேட்க்கு மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்.., வைரலாகும் டிவிட்டர் பதிவு!!

லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் தளபதி 67 படத்தின் அப்டேட் ஒன்றை நடிகர் மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தளபதி 67:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நுழைந்த கொஞ்ச காலத்தில் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாஸ்டர், கைதி மற்றும் விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களாக அமைந்தது. இதனால் இவரின் அடுத்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது லோகேஷ் விஜய்யை வைத்து தளபதி 67 படத்தை எடுத்து வருகிறார். சமீபகாலமாக இணையத்தில் தளபதி 67 படத்தை பற்றி தான் தொடர்ந்து பேச்சு அடிபட்டு வருகிறது. மேலும் பட குழுவினரிடம் இருந்து எப்போது அப்டேட் வரும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்து கொண்டிருக்கின்றனர்.

விஜய் டிவி சீரியலுக்கு இவங்க வராங்க மக்களே., சம்பவத்துக்கு ரெடி ஆகுங்க! லீக்கான மாஸ் அப்டேட்!!

இந்நிலையில் நடிகர் மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் தளபதி 67 குறித்து ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதாவது தளபதி 67 படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. லோகேஷ் மற்றும் எங்கள் தளபதியை சந்தித்தேன். அதே ஆற்றல். முதல் நாளே.. தூள்” என பதிவிட்டிருந்தார். இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்திருந்தனர். தற்போது அவர் ட்விட்டிற்கு படக்குழுவினருடன் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால், இந்த ட்வீட்டை அழித்து விட்டேன் என்னை மன்னியுங்கள் என்று ரீ ட்வீட் செய்துள்ளார். தற்போது இந்த பதிவு வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here