ஆச்சாரமாக மனோபாலா மனைவி, மகன், மருமகளுடன் எடுத்த புகைப்படம்.., இணையத்தில் வைரல்!!

0
ஆச்சாரமாக மனோபாலா மனைவி, மகன், மருமகளுடன் எடுத்த புகைப்படம்.., இணையத்தில் வைரல்!!
ஆச்சாரமாக மனோபாலா மனைவி, மகன், மருமகளுடன் எடுத்த புகைப்படம்.., இணையத்தில் வைரல்!!

தமிழ் சினிமாவில் 80ஸ் கால கட்டத்தில் கொடி கட்டி பறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்தவர் தான் இயக்குனர் மனோ பாலா. இவர் இயக்கிய ஆகாய கங்கை முதல் கடைசியாக இயக்கிய நைனா படம் வரை ஹிட் கொடுத்து, கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். அதன் பின்னர் நடிப்பில் அதிக ஆர்வம் ஏற்பட்டு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். இதையடுத்து நகைச்சுவை நடிகராக உருவெடுத்த இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து காமெடியில் கலக்கினார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சமீபத்தில் கூட விஜய் நடிக்கும் லியோ படத்தில் தாம் இணைந்திருப்பதாக அப்டேட் கொடுத்து தளபதி ரசிகர்களை குஷி படுத்தினார். இந்நிலையில் கல்லிரலில் ஏற்பட்ட பிரச்சனையால் கொஞ்சம் நாட்கள் அவதிப்பட்டு வந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. மேலும் அவருடைய இறப்புக்கு ரஜினி, வடிவேலு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

ஐயோ.., ஜீவாவுக்கு அடுத்த தர்ம அடி.., கேவலப்படுத்திய ஜனார்த்தனன்.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்!!!

இந்நிலையில் நடிகர் மனோ பாலா தனது மனைவி, மகன் மற்றும் மருமகளுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இப்படி தனது குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருந்த நிலையில் அவருடைய இழப்பை கண்டிப்பாக அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது என்று ரசிகர்கள் வருத்தமடைந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here