இந்தியில் நடிக்க உள்ள பிக் பாஸ் பிரபலம் – வாய்ப்பை செதுக்கி தேர்ந்து எடுத்துட்டீங்க போல!!

0

தல மற்றும் தளபதியுடன் இணைந்து நடித்த பிரபல நடிகர் மகத் தற்போது பாலிவுட்டில் ஒரு படத்தில் அறிமுகமாக உள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில் மகத்:

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளவர் நடிகர் மஹத். இவர் நடிகர் விஜய்க்கு தம்பியாக ஜில்லா படத்தில் நடித்திருந்தார். இவர் மேலும், தல அஜித்துடன் இணைந்து மங்காத்தா என்ற படத்திலும் நடித்துள்ளார். இவர் தற்போது பாலிவுட்டில் ஒரு படத்தில் நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த படத்தில், இயக்குநர் சத்ரம் ரமணி இயக்க உள்ளதாகவும், முதாஸ்ட்ஸர் அஜிஸ் கதை எழுதி உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தில், ஹிந்தி நடிகர் ஜாஹிர் இக்பால் என்பவருடன் இணைந்து இவர் நடித்துள்ளதால் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விரைவில் இது குறித்த முறையான அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here