குடும்ப கஷ்டத்தை மூட்ட கட்டி வைத்த மதன் பாபு.., அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி அசத்தல்!!

0
குடும்ப கஷ்டத்தை மூட்ட கட்டி வைத்த மதன் பாபு.., அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி அசத்தல்!!
குடும்ப கஷ்டத்தை மூட்ட கட்டி வைத்த மதன் பாபு.., அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி அசத்தல்!!

நடிகர் மதன் பாபு இரண்டு வருடங்களாக நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து வரிசையாக அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகியுள்ளார்.

நடிகர் மதன் பாபு:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் குமரி முத்துக்கு பிறகு சிரிப்பால் பேமஸான நடிகர் தான் மதன் பாபு. 90ஸ் காலகட்டத்தில் இருந்து நடித்து வரும் இவர் பல தமிழ் முன்னணி நட்சத்திரங்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். மேலும் வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையிலும் தடம் பதித்து, பல ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக இருந்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனை தொடர்ந்து 600 படங்களுக்கு மேல் நடித்த இவர் கடந்த இரண்டு வருடங்களாக குடும்பத்தில் இருந்த பிரச்சனை காரணமாக நடிப்புக்கு ரெஸ்ட் கொடுத்திருந்தார். அதையடுத்து பிரபு தேவா நடித்த பகிரா படத்திலும் மற்றும் காஜல் அகர்வால் நடித்த கோஸ்டி படத்திலும் நடித்து சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார்.

நாகசைதன்யாவுடன் விவாகரத்து குறித்து மனம் திறந்த சமந்தா.., கண்ணீர் மல்க பேட்டி!!

தற்போது பிரபல இயக்குனரான கே.எஸ்.ரவிக்குமார் படைப்பில் உருவாகி வரும் ஒரு படத்திலும், சந்தானம் நடிப்பில் தயாராகும் `கிக்’ என்ற படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார் மதன் பாபு. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. மேலும் அவரின் அந்த சிரிப்பை கேட்டு இரண்டு வருடம் ஆச்சே என்று ரசிகர்கள் அவரின் ரீ என்ட்ரியை கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here