‘ஏப்ரல் 6ஆம் தேதி எலெக்சன் வச்சிருக்கோம், மறக்காம வந்து ஒட்டு போடுங்க’ – வைரலாகும் மாதவன் வீடியோ!!

0
madavan

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் மக்கள் 100 சதவீதம் வாக்குகளை செலுத்த வேண்டும் என வீடியோ பதிவின் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்துள்ளார் நடிகர் மாதவன்.

மாதவன் ட்வீட்

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான ஆயத்த பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. தேர்தல் குறித்த ஒவ்வொரு செய்திகளும் தினம் தினம் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த தேர்தலில் மக்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்குகளை அளிக்க வேண்டும் என மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக தேர்தலில் அனைத்து மக்களும் கண்டிப்பாக ஓட்டு போட வேண்டும் எனவும், 100 சதவீதம் வாக்குகள் செலுத்தப்பட வேண்டும் எனவும் நடிகர் மாதவன் பேசியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

புதிய ஓடிடி தளத்தை துவங்கும் நடிகர் டி.ராஜேந்தர் – எதற்காக தெரியுமா??

இது குறித்து வீடியோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் மாதவன். அதில், ‘ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் வைச்சிருக்கோம். எல்லாரும் மறக்காம வந்து ஒட்டு போட்ருங்க. உங்க வீட்டு பக்கத்துல தான். என்னடா கல்யாணத்துக்கு கூப்பிடுற மாதிரி கூப்பிடுறானேன்னு பாக்குறீங்களா. ஆமாங்க இது தமிழ்நாட்டு கல்யாணம் தான். தேர்தலில் முக்கியமான கெஸ்ட் நீங்க தான். ஏப்ரல் 6ஆம் தேதி மறக்காம ஓட்டு போட்டுடுங்க. 100% வாக்குகள் கட்டாயம்’ என பேசியுள்ளார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here