நடிகர் மாதவனுக்கு சிறந்த இயக்குனருக்கான விருது….,உற்சாகத்தில் ரசிகர்கள்….,

0
நடிகர் மாதவனுக்கு சிறந்த இயக்குனருக்கான விருது....,உற்சாகத்தில் ரசிகர்கள்....,
நடிகர் மாதவனுக்கு சிறந்த இயக்குனருக்கான விருது....,உற்சாகத்தில் ரசிகர்கள்....,

தமிழ் சினிமாவில் ‘அலைபாயுதே’ என்ற சூப்பர் ஹிட் காதல் திரைப்படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் மாதவன். இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு ஏகப்பட்ட வரவேற்புகளை கொடுத்தது. இந்த வரவேற்புகள் மூலம் மின்னலே, டும் டும் டும், ரன், அன்பே சிவம், ஆயுத எழுத்து உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களைக் கொடுத்தார் நடிகர் மாதவன்.

இதற்கிடையில், ‘ரகுனா கை தில் மெயின்’ என்ற ஹிந்தி சினிமாவில் அறிமுகமான நடிகர் மாதவன் பாலிவுட்டில் ஒரு கலக்கு கலக்கி வந்தார். அந்த வகையில், கடந்த 2020 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான ‘ராக்கெட்டரி: நம்பி விளைவு’ என்ற திரைப்படம் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி எக்கச்சக்க வசூல் பார்த்தது.

நடிகை கீர்த்தி சுரேஷ் தொழில் அதிபருடன் காதல்…,தந்தை விளக்கம்….,

இந்த திரைப்படம் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இதனை நடிகர் மாதவன் இயக்கம் செய்து, நடித்து, தயாரித்திருந்தார். இந்த நிலையில், மாதவனின் ராக்கெட்டரி திரைப்படம் சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் விழாவில் விருதைப் பெற்றுள்ளது. அதாவது, சிறந்த இயக்குனருக்கான விருதை மாதவன் ‘ராக்கெட்டரி’ திரைப்படத்திற்காக பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here