“DADA” படத்தின் வெற்றியை தொடர்ந்து மலமலவென சம்பளத்தை கூட்டிய பிக்பாஸ் கவின்… எவ்வளவு தெரியுமா.?

0
"DADA" படத்தின் வெற்றியை தொடர்ந்து மலமலவென சம்பளத்தை கூட்டிய பிக்பாஸ் கவின்... எவ்வளவு தெரியுமா.?

நடிகர் கவின் தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது.

நடிகர் கவின்:

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மக்களிடம் அறிமுகமானவர் தான் நடிகர் கவின். இப்பொழுது வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார். தற்போது புதுமுக இயக்குனர் கணேஷ்.கே பாபு படைப்பில் உருவான டாடா திரைப்படத்தில் நடித்திருந்தார். அதுபோக இப்படத்தில் பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸ், கே.பாக்யராஜ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பெரிய எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம் கடந்த மாதம் 10ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியால் கவினின் மார்க்கெட் உயர்ந்துள்ளது. தற்போது அவரை வைத்து படம் பண்ண பல தயாரிப்பு நிறுவனம் போட்டி போட்டு வருகிறது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஏப்ரல் 8ம் தேதி மட்டும் நடை அடைப்பு., கோவில் நிர்வாகம் தகவல்!!!

இந்த நிலையில் கவின் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் கவின் தனது சம்பளத்தை 1.5 கோடிக்கு உயர்த்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது கவின் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கும் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும் இப்படத்தில் அனிருத் இசையமைக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here