மனதை கொள்ளை கொள்ளும் பொன்னியின் செல்வன் “அக நக” பாடல் .., இணையத்தில் வெளியீடு!!

0
மனதை கொள்ளை கொள்ளும் பொன்னியின் செல்வன்
மனதை கொள்ளை கொள்ளும் பொன்னியின் செல்வன் "அக நக" பாடல் .., இணையத்தில் வெளியீடு!!

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்த திரிஷா மற்றும் வந்தியத்தேவனாக கலக்கிய நடிகர் கார்த்திக் டிவிட்டரில் உரையாடியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பொன்னியின் செல்வன் :

இயக்குனர் மணிரத்னம் படைப்பில் தயாரான பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த வருடம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி உலக அளவில் வெற்றி பெற்றது. இப்படத்தில் விக்ரம், கார்த்திக், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தனர். தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், இப்பொழுது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் பொன்னியின் செல்வன் பார்ட் 2 அடுத்த மாதம் 28 தேதி வெளியாக இருக்கிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த நிலையில் பொன்னியின் செல்வன்-2 படத்தில் இடம்பெற்ற ‘அக நக’ என்ற பாடல் இன்று மாலை வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். இந்நிலையில் நடிகர் கார்த்தி மற்றும் திரிஷா ட்விட்டரில் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்த கார்த்திக், குந்தவை கேரக்டரில் நடித்த நடிகை திரிஷாவுக்கு ட்விட்டர் பக்கத்தில் இளையபிராட்டி… hi என்று அனுப்பியுள்ளார்.

ச்சீ.., நீங்க நல்லவரு கிடையாது.., வெற்றியை பற்றி தெரிந்து கொள்ளும் சுடர்.., தென்றல் வந்து என்னை தொடும் ட்விஸ்ட்!!

கொஞ்ச நேரம் கடந்த பின்னர் திரிஷா Replay செய்யாமல் இருந்துள்ளார். அதற்கடுத்து என்ன பதிலே இல்லை என்று சோகமான இமோஜி வைத்து மெசேஜ் அனுப்பினார். அதற்கு என்ன வாணர்குல இளவரசே? என்று திரிஷா Replay செய்துள்ளார். தற்போது இந்த சம்பவம் கோலிவுட்டில் பேசும் பொருளாக அமைந்துள்ளது.

மேலும் படத்தின் புரோமோஷனுக்காக தான் இந்த மாதிரி டிவிட்டரில் பேசிக்கொள்கிறார்கள் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அக நக பாடல் வீடியோவை படக்குழுவினர் வெளிட்டுள்ளது. சக்தி ஸ்ரீ மற்றும் கோபாலன் குரலில் வெளியான இந்த பாடல் ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்து வருகிறது. மேலும் வந்தியத்தேவன், குந்தவை காதல் எப்படி இருக்க போகிறது என்று ரசிகர்களின் எதிர்பரப்பை எகிற வைத்துள்ளது. தற்போது அந்த பாடல் இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here