படு வித்தியாசமான தோற்றத்தில் களமிறங்கியுள்ள நடிகர் கார்த்தி – பட பெயரே ஒரு மார்க்கமா இருக்கே!

0
படு வித்தியாசமான தோற்றத்தில் களமிறங்கியுள்ள நடிகர் கார்த்தி - பட பெயரே ஒரு மார்க்கமா இருக்கே!

வளர்ந்து வரும் நடிகரான கார்த்தி அடுத்த படைப்பில் புதிய அவதாரம் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்திற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளாராம்

நடிகர் கார்த்திக்:

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில் இருப்பவர் நடிகர் கார்த்தி. இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் திரைப்படம் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர் இவர். இதனை தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார். அதன் வரிசையில் சிறுத்தை, பையா போன்ற படங்கள் அமைந்துள்ளது.

அண்மையில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான விருமன் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வனில் வந்தியதேவனாக கார்த்தி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து படங்கள் வெளியாக இருக்கின்றன. இந்நிலையில் கார்த்திக் நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் புதிய அவதாரம் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது இயக்குனர் ராஜுமுருகன் கார்த்தியின் அடுத்த படத்தை இயக்க உள்ளார். மேலும் இந்த படத்திற்கு ஜப்பான் என்று பெயர் சூட்ட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் கதையம்சம் சற்று வித்தியாசமாக அமைந்துள்ளதால், நடிகர் கார்த்தி யாரும் பார்க்காத தோற்றத்தில் இப்படத்தில் தென்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here