அடேங்கப்பா.., புது அவதாரம் எடுத்த சூப்பர் ஹிட் இயக்குனர்.., ஜப்பான் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!!

0
அடேங்கப்பா.., புது அவதாரம் எடுத்த சூப்பர் ஹிட் இயக்குனர்.., ஜப்பான் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!!
அடேங்கப்பா.., புது அவதாரம் எடுத்த சூப்பர் ஹிட் இயக்குனர்.., ஜப்பான் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!!

கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் ஜப்பான் படத்தில் பிரபல இயக்குனர் இணைந்திருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பான் திரைப்படம்:

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிடங்களை கொடுத்து முன்னணி நடிகராக நிலைத்து நிற்பவர் தான் நடிகர் கார்த்திக். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனை தொடர்ந்து ஜப்பான், கருப்பு ராஜா வெள்ளை ராஜா, பார்ட்டி மற்றும் சர்தார் 2 ஆகிய படங்களில் கமிட் ஆகியுள்ளார். தற்போது இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் திரைப்படம் தான் ஜப்பான். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் இன்னொரு பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பட்டையை கிளப்பும் S.J சூர்யாவின் “வதந்தி” பர்ஸ்ட் லுக் போஸ்டர்.., இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

அதாவது இப்படத்தில் காவல்துறை கெட்டப்பில் இயக்குனர் விஜய் மில்டன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவரிடம் படக்குழுவினர் 30 நாட்கள் கால்ஷீட் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஒரு நேர்மையான போலீஸாக விஜய் மில்டன் நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here