தமிழ் சினிமா நடிகர் கார்த்தி, WWE சூப்பர்ஸ்டார் மற்றும் ஹாலிவுட் நடிகரான ஜான் சினாவை இன்று சந்தித்துள்ளார். அதாவது, ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற WWE ஸ்பெக்டாக்கிள் என்ற நிகழ்ச்சியை விளம்பரப்படுத்துவதற்காக 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்த ஜான் சினாவை நடிகர் கார்த்தி சந்தித்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அப்போது, அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்ட கார்த்தி, ‘ஜான் சினாவை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. அவர் மிகவும் அன்பாக நடந்து கொண்டார். அந்தச் சில நிமிடங்களில் அவர் எல்லோரையும் ஸ்பெஷலாக உணரவைத்தது அற்புதம்’ என்ற கேப்ஷனை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.