பருத்தி வீரன் முதல் கைதி வரை – நடிகர் கார்த்திக்கு இன்று பிறந்தநாள்..!

0

பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கடைசியாக வெளிவந்த கைதி திரைப்படத்தில் தில்லியாக மக்கள் மனதில் நீங்காமல் இருக்கும் நடிகர் கார்த்தி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் இணையத்தில் #HBDKarthi தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கார்த்தி:

கார்த்தி அமெரிக்காவில் இன்ஜினியரிங் படித்தவர். நடிகர் சிவகுமாரின் பையன், சூர்யாவின் தம்பி என சினிமாவில் நுழையும் பொழுதே இவரின் மீது அதிகளவில் எதிர்பார்ப்புகள் இருந்தது. அனைத்தையும் தனது முதல் படத்திலேயே பூர்த்தி செய்தார் கார்த்தி. அவர் நடித்த பருத்தி வீரன் திரைப்படம் இன்றளவும் ரசிகர்களால் மறக்க முடியாது. அதில் கிராமத்து நடிகராக களமிறங்கிய கார்த்தி அதன் பிறகு தனது ஸ்டைலை மாற்றினார். அடுத்து பையா, சிறுத்தை, தீரன், மெட்ராஸ் என பல வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

அதிகளவு பெண்கள் ரசிகர்களை கொண்ட கார்த்தி சினிமாவில் தனக்கென தனி பாதையை அமைத்துக் கொண்டார். இடையில் இவரின் அலெக்ஸ் பாண்டியன் போன்ற பாடங்கள் தோல்வி அடைந்தது. இதனால் இவரது மார்க்கெட் சரியத் தொடங்கிய நிலையில், கடந்த வருடம் வெளிவந்த கைதி, கடைக்குட்டி சிங்கம் ஆகிய திரைப்படங்கள் மீண்டும் அவரது மார்க்கெட்டை உயர்த்தியது. இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடும் கார்த்திக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here