நடிகை மீனாவுக்கு கிடைத்த சூப்பர் வாய்ப்பு.., கடைசி நேரத்தில் தட்டிப்போன பரிதாபம்.., வீடியோ ஆதாரம் உள்ளே!

0

நடிகர் கமல்ஹாசன் நடித்த தெனாலி படத்தில் பிரபல நடிகை நடித்திருந்தாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது.

தெனாலி:

தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடித்து பட்டையை கிளப்புபவர் தான் நடிகர் கமல்ஹாசன். ஒவ்வொரு கேரக்டருக்கும் அதிகமா மெனக்கெடுவதால் தான் இவரை உலக நாயகன் என்று ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள். இவர் நடிப்பில் கடந்த 2000ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் தெனாலி. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி இருந்த படத்தில் தேவயானி, ஜோதிகா, ஜெயராம், சார்லி, டெல்லி கணேஷ் உட்பட பலர் நடித்திருந்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார். மேலும் இப்படத்தில் கமல்ஹாசன் இலங்கை தமிழனாக நடித்து அசத்தியிருப்பார். ஜெயராமுக்கு இவருக்கும் இருந்த காமெடி கெமிஸ்ட்ரி படத்தை வேற லெவலுக்கு எடுத்து சென்றிருக்கும். மேலும் இப்படத்தில் கமல்ஹாசன் மூச்சு விடாமல் எனக்கு எல்லாம் பயம் என்ற வசனத்தை பிசிறு தட்டாமல் பேசியிருப்பார்.

ஏப்ரல் 1ம் தேதி முதல் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூல்., வெளியான அறிவிப்பால் பொதுமக்கள் குழப்பம்!!!

இந்த நிலையில் இப்படத்தில் நடித்த முன்னணி நடிகை குறித்து ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் கமல்ஹாசன் நடித்த தெனாலி திரைப்படத்தில் நடிகை மீனாவும் நடித்துள்ளார். ஆனால் சில காரணத்தால் அவர் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here