‘சீரமைப்போம் தமிழகத்தை’ – டிச.13 முதல் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம்!!

0

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நாளை மறுநாள் முதல் தன் முதற்கட்ட சட்டசபை பிரச்சாரத்தை மதுரையில் நடத்தவுள்ளார் என அக்கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முதல் கட்ட தேர்தல் பிரச்சாரம்:

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதனால் தற்போதே அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பிரதான அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக, பாமக, தேமுதிக, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணியை முடிவு செய்யும் பணியில் தயாராக உள்ளன. ஆளும் கட்சியான அதிமுக, பாஜகவுடன் கூட்டணி என ஏற்கனவே அறிவித்து விட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் எந்த கூட்டணியுடன் மையம் கொள்ளும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் இக்கட்சியின் தலைவர் கமல் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து செயல்படும் என கூறியுள்ளார். தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பது, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில்,தேர்தல் பிரச்சாரத்தை வரும் 13-ம் தேதி மதுரையில் தொடங்கி தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 16-ம் தேதி வரை பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.

தமிழகத்தில் டிசம்பரில் பள்ளிகள் திறப்பு??

இதுகுறித்து,அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற பெயரில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தனது முதல்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை வரும் 13-ம் தேதி மதுரையில் தொடங்கி தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 16-ம் தேதி வரை பிரச்சாரம் செய்ய உள்ளார். கட்சியின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் பெரும் எழுச்சியுடன் கலந்து கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here