படம் பார்க்க நரிக்குறவருக்கு அனுமதி மறுப்பு..,மனிதநேயமற்ற ரோகிணி தியேட்டரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த கமல்ஹாசன்!!

0
படம் பார்க்க நரிக்குறவருக்கு அனுமதி மறுப்பு..,மனிதநேயமற்ற ரோகிணி தியேட்டரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த கமல்ஹாசன்!!
படம் பார்க்க நரிக்குறவருக்கு அனுமதி மறுப்பு..,மனிதநேயமற்ற ரோகிணி தியேட்டரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த கமல்ஹாசன்!!

நடிகர் சிம்புவின் பத்து தல திரைப்படம் தமிழகம் முழுவதும் உள்ள திரையங்குகளிலும் நேற்று வெளியானது. இதனால் இவரது ரசிகர்கள் பலரும் இப்படத்தை பார்க்க தியேட்டருக்கு சென்றுள்ளனர். அந்த வகையில் நரிக்குறவ பழங்குடியின பெண் தனது குழந்தைகளுடன் சென்னை ரோகிணி தியேட்டருக்கு சென்றுள்ளார். அந்த பெண் கையில் டிக்கெட்டுகள் வைத்திருந்தும், இன பாகுபாட்டின் காரணமாக தியேட்டருக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தியேட்டர் நிர்வாகத்தின் மனிதநேயமற்ற, இந்த செயல் இணையத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ரோகிணி தியேட்டர் U/A படம் என்பதால் தான் அனுமதி மறுக்கப்பட்டது என காரணம் கூறியிருந்தனர். ஆனால் இது முற்றிலும் தவறான புரிதல் என கூறிய ‘பத்து தல’ பட இயக்குனர் வருத்தம் தெரிவித்திருந்தார்.

ஆஸ்கர் புகழ் பொம்மன்- பெள்ளியிடம் ஒப்படைக்கப்பட்ட குட்டி யானை உயிரிழப்பு – சோகத்தில் சுற்றுலாப் பயணிகள்!!

இந்த நிலையில் மக்கள் மனிதநேய கட்சி நிறுவனர் மற்றும் நடிகருமான கமல்ஹாசன் அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதாவது ”கையில் டிக்கெட் இருந்தும் தாங்கள் நாடோடி பழங்குடியினர் என்ற காரணத்தால் திரையரங்குகளில் அனுமதி மறுக்கப்பட்ட செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது” என்ற வார்த்தைகளால், தியேட்டரின் இந்த செயலுக்கு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here