முன்னணி நடிகர்களுக்கு வலை வீசும் கமல்.., விக்ரம் வெற்றிக்கு பிறகு கையாளும் புதிய யுக்தி!!

0

விக்ரம் வெற்றிக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் ஒரு மல்டி ஸ்டார் கதையில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன்:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் வரலாறு காணாத வெற்றி வாகை சூடியது. தற்போது 100 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் கிட்டத்தட்ட 450 கோடி வசூலை அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வெற்றியை தொடர்ந்து கமல் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் நடிகர் கமல் நடிப்பு மட்டுமின்றி முன்னணி நடிகர்களை வைத்து படம் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் வைத்து படம் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆண்டவர் ஒரு மல்டி ஸ்டார் கதையை தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறாராம்.

அப்படத்தில் நடிப்பதற்கு நடிகர் சூர்யா, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகர் விஜய் சேதுபதியிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார் நடிகர் கமல். அந்த வகையில் விஜய் சேதுபதி மற்றும் சூர்யா இருவரும் விக்ரம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளனர். கூடிய விரைவில் இது குறித்து பரபரப்பான அறிவிப்பு வெளியாகும் என்று கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here