35 ஆண்டுகளுக்கு பிறகு கமலுடன் கூட்டணி வைக்கும் பிரபல இயக்குனர்.., கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0
35 ஆண்டுகளுக்கு பிறகு கமலுடன் கூட்டணி வைக்கும் பிரபல இயக்குனர்.., கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!
35 ஆண்டுகளுக்கு பிறகு கமலுடன் கூட்டணி வைக்கும் பிரபல இயக்குனர்.., கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

இயக்குனர் சங்கர் படைப்பில் இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல்ஹாசனின் அடுத்த திரைப்படம் குறித்து தற்போது இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் மூத்த கலைஞராக கொடி கட்டி பறப்பவர் தான் நடிகர் கமல்ஹாசன். இவர் 60 ஆண்டுகளுக்கு மேல் சினிமா திரையில் அயராமல் உழைத்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது இயக்குனர் சங்கர் படைப்பில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகலாம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிஸியான நேரத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடிகர் அஜித்தை வைத்து துணிவு படத்தை இயக்கி வரும் வினோத்தின் அடுத்த படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக இணையத்தில் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் இது குறித்து ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது.

நயன்-விக்கி தம்பதி பாணியில் இணையும் அடுத்த ஜோடி- தேதியுடன் வெளியான திருமண அறிவிப்பு!!

அதாவது வினோத் இயக்கத்தில் கமல் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. மேலும் கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு பிறகு இந்த கூட்டணிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here