உலக நாயகனின் இந்த காரியத்தால்..,இயக்குனர் ஷங்கர் எடுத்த அதிரடி முடிவு., இந்தியன் 2 படத்தின் அப்டேட்!!

0
உலக நாயகனின் இந்த காரியத்தால்..,இயக்குனர் ஷங்கர் எடுத்த அதிரடி முடிவு., இந்தியன் 2 படத்தின் அப்டேட்!!
உலக நாயகனின் இந்த காரியத்தால்..,இயக்குனர் ஷங்கர் எடுத்த அதிரடி முடிவு., இந்தியன் 2 படத்தின் அப்டேட்!!

சென்னையில் உள்ள ஃபிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டு அங்கு இந்தியன் 2 ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் மேலும் மூன்று இயக்குனர்கள் களம் இறங்கியுள்ளனர்.

அதிரடி முடிவு:

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் படம் ‘இந்தியன் 2. இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 2019ம் ஆண்டு தொடங்கிய நிலையில், இதையடுத்து ஏற்பட்ட விபத்து, கொரோனா பொது முடக்கம், படத்தின் பட்ஜெட் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த பிரச்சனைகள் எல்லாம் சரி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி மீண்டும் தொடங்கப்பட்டது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் இயக்குனர் ஷங்கர், இந்தியன்-2 மற்றும் ராம் சரணை (RC15) வைத்து இயக்கும் புதிய திரைப்படம் என இரண்டு படத்திற்கான படப்பிடிப்பிலும் பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் இந்தியன் 2 படத்தை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று ஷங்கரிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து நடிகர் கமல்ஹாசன், மற்ற திரைப்படங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி போன்றவைகளில் பிசியாக இருப்பதால் ஒரு மாதத்திற்கு 10 நாட்கள் மட்டும்தான் இந்தியன் 2 படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் இயக்குனர் சங்கர், இந்தியன் 2 படத்தை விரைவில் முடிக்க வேண்டும் என்ற நோக்கில் மேலும் மூன்று இயக்குனர்களை படத்தை இயக்க களம் இறக்கியுள்ளார். அதாவது ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி, இயக்குனர்களாக மாறிய வசந்த பாலன், சிம்பு தேவன், அறிவழகன் ஆகியோர் தான் இந்தியன்-2 படத்தில் இணைகின்றனர். அந்த படத்தில் இடம்பெறும் கமல்ஹாசன் காட்சியை இயக்குநர் ஷங்கர் படமாக்குகிறார்.மற்றவர்களின் காட்சிகளை வசந்தபாலன், சிம்பு தேவன், அறிவழகன் ஆகியோருக்கு பிரித்து வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here