உங்கள் பாசத்திற்கு என்றுமே நான் தலை வணங்குகிறேன் – ரசிகர்களை கண்கலங்க வைத்த கமல்!!

0

நடிகர் கமல் தன் பிறந்தநாளை முன்னிட்டு தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து நபர்களுக்கும் நன்றி என்று  தன்னுடைய  டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நன்றி சொன்ன கமல்:

தமிழ் திரை உலகத்தில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் கமல்ஹாசன்.  உலக நாயகன் என அன்போடு அழைக்கப்படும்  இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, நடிகர் , வசனகர்த்தா, இயக்குனர்  என பல பரிமாணங்களில்  தம் முத்திரை பதித்துள்ளார்.  இந்த நிலையில், தனது 67 வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.

இந்த பிறந்தநாளை  முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், மக்கள்  நீதி மய்ய கட்சி தொண்டர்களும், திரை பிரபலங்களும், பொது மக்களும் வாழ்த்து தெரிவித்தனர். இதனை அடுத்து, கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் முக்கிய பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தன் மேல் அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் உங்கள் பாசத்திற்கு நான் தலை வணங்குகிறேன்  என்று தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here